Wednesday, November 17, 2021

‘தேள்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

‘தூத்துக்குடி’, ‘திருத்தம்’, ‘மதுரை சம்பவம்’, ‘போடிநாயக்கனூர் கணேசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரிகுமார். தற்போது ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். ‘தேள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியில் அறிமுகமாகும் மஹத்

ஹூமா குரேஷி மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்திப் படத்தில் நடிகர் மஹத் அறிமுகமாகிறார்.

தமிழ், தெலுங்கில் நடிகராக இருப்பவர் மஹத் ராகவேந்திரா. நடிகர் சிலம்பரசனின் நெருங்கிய நண்பரான இவர் அவருடைய சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தவிர ‘மங்காத்தா’, ‘பிரியாணி’, ‘சென்னை 28 - 2’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ‘2030’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ‘ப்ளாஷ் பார்வேர்ட்’ வகையில் உருவாகி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எளிதான வெற்றியாக அமையவில்லை; வீரர்கள் கற்றுக்கொள்ளவார்கள்: ரோஹித் சர்மா அறிவுரை


நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கிடைத்த வெற்றி எளிதானதாக அமையவில்லை. இந்த அனுபவத்திலிருந்து வீரர்கள் கற்றுக்கொள்வார்கள் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தட்டுத்தடுமாறி வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி: எளிதான சேஸிங்கை கடினமாக்கி வென்ற இந்திய அணி: ரசிகர்களுக்கு பிரஷர் ஏற்றிய ரிஷப், ஸ்ரேயாஸ்


ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவின் பொறுப்பான பேட்டிங்கால் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தட்டுத்தடுமாறி வென்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்ெகட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விஜய் தேவரகொண்டா படத்தில் மைக் டைசன்: வைரலாகும் புகைப்படங்கள்

'லைகர்' படத்தில் மைக் டைசன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியது.

கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் படம் 'லைகர்'. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். தற்காப்புக் கலை, சண்டைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தளபதி 66 அப்டேட்: விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா

‘தளபதி 66’ படத்தில் இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவா நடனப் பயிற்சி அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். 'தோழா', 'மஹரிஷி' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இதனை இயக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படம் என்பதால் 'தளபதி 66' என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இவ்வளவு அன்பை இதுவரை கண்டதில்லை: ஆதரவுக்கு சூர்யா நன்றி

தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்